ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2019 3:45 AM IST (Updated: 26 Nov 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ரிஷிவந்தியம், 

சங்காரபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ரிஷிவந்தியம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை சார்ந்த திட்டங்களை பெற வேண்டுமானால் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்துக்கு செல்கிறார்கள். ரிஷிவந்தியத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் உள்ளது.

அதோடு ரிஷிவந்தியத்தில் இருந்து சங்கராபுரம் தாலுகா அலுவலகம் செல்ல நேரடி பஸ் வசதியும் இல்லை. இதனால் ரிஷிவந்தியத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அல்லது திருக்கோவிலூருக்கு சென்று அங்கிருந்து சங்கராபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே சங்கராபுரம் தாலுகாவை பிரித்து ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாளைய கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 10 மணியளவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இதயத்துல்லா, வெங்கடேசன், சம்பத்குமார், மாரிமுத்து வேல்முருகன் கண்ணன் இளங்கோவன் ஷேக் லத்தீப் உட்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story