திருப்பூரில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள நெடுஞ் சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை வட்டத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர், கரூர் கோட்டங்களில் தமிழ்நாடு சார்நிலை விதிகளின்படி முதுநிலைப்பட்டியல் வெளியிட வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு பதிவரை எழுத்தர் பதவி உயர்வு மற்றும் ஆபத்துப்படி வழங்க வேண்டும். சாலைபராமரிப்பு பணிமேற்கொள்ள கருவி, தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்ட தலைவர் சிவகுமார் வரவேற்றார். கோட்ட செயலாளர்கள் ராமன், தில்லையப்பன், பழனிச்சாமி, கோட்ட தலைவர்கள் செவந்திலிங்கம், வெங்கிடுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். நிர்வாகிகள் அய்யாசாமி, கருப்புசாமி, முருகேசன், இளங்கோ ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில பொருளாளர் தமிழ், செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் கணேசன், செயலாளர் ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் அம்சராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். முடிவில் தாராபுரம் கோட்ட பொருளாளர் முருகசாமி நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story