மணல் கடத்தலை தடுக்க சென்றபோது விபத்து: போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி சாவு - டிசம்பர் 1-ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
காட்பாடி அருகே மணல் கடத்தலை தடுக்க காரில் சென்றபோது லாரி மோதியதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்பாடி,
வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒருபகுதியாக மணல் கடத்தலை தடுக்க தனிப்படை ஒன்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அமைத்துள்ளார். இந்த தனிப்படையினர் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடங்களுக்கு நேரடியாக சென்று மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வார்கள்.
மேலும் மணல் கடத்தலுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இவர்கள் மணல் கடத்தல் நடைபெறும் பகுதிக்கு உட்பட்ட சட்டம், ஒழுங்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் நேரடியாக சென்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். தினமும் இரவு ேவளையில் பாலாற்று கரையோரப்பகுதிகளில் தனிப்படையினர் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் மணல் கடத்தல் தடுப்புப்பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீஸ்காரர்கள் குடியாத்தம் தாலுகா எரியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 29), அடுக்கம்பாறையை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் மணல் கடத்தலை தடுக்க கடந்த 17-ந் தேதி அதிகாலை காட்பாடியில் இருந்து லத்தேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
கரசமங்கலம் கூட்ரோடு அருகே சென்றபோது எதிரே சமையல் கியாஸ் ஏற்றி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீஸ்காரர்கள் ராஜீவ்காந்தி, சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக 3 பேரும் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜீவ்காந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 5 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜீவ்காந்திக்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story