டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பை ஓட்டலுக்கு வந்தனர்
டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பை ஓட்டலுக்கு வந்தனர். உண்மையை உணர்ந்து கட்சிக்கு திரும்பியதாக அவர்கள் பேட்டி அளித்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் குதிரை பேரத்தில் சிக்கிவிடாமல் இருக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை காலை பாரதீய ஜனதா அரசு அமைந்தபோது, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற அஜித்பவாருடன் கவர்னர் மாளிகைக்கு சென்ற தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் தவுலத் தரோடா (சகாப்பூர்), நிதின் பவார் (கல்வான்), நர்கரி ஜிர்வால் (தின்டோரி) ஆகியோர் அதன் பின்னர் மாயமாகி விட்டனர். அவர்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களை தனி விமானம் மூலம் பாரதீய ஜனதாவினர் டெல்லிக்கு கடத்தி சென்றதாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார். பின்னர் நேற்று முன்தினம் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தேசியவாத காங்கிரசுக்கு திரும்பி விட்டதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த னர்.
பின்னர் அவர்கள் நிரு பர்களிடம் கூறும்போது, ‘‘எங்களை டெல்லிக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு தான் நடப்பதை உணர்ந்தோம். சரத்பவார், சுப்ரிலா சுலே, ஜெயந்த் பாட்டீல் போன்ற எங்கள் தலைவர்களை தொடர்பு கொண்டு உங்களோடு தான் நாங்கள் இருக்கிறோம் என கூறினோம்’’ என்றனா்.
Related Tags :
Next Story