இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா ஆட்சி கவிழாது; எடியூரப்பா பேட்டி


இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா ஆட்சி கவிழாது; எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 27 Nov 2019 12:00 AM GMT (Updated: 26 Nov 2019 9:30 PM GMT)

பெங்களூரு உளிமாவு ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா, நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு, 

கர்நாடகத்தில் இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும். இதை விளம்பரத்திற்காக கூறவில்லை. எல்லாவற்றையும் ஆழமாக ஆலோசனை நடத்தி சொல்கிறேன். இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா ஆட்சி கவிழும் என்று சித்தராமையா கூறுகிறார். பா.ஜனதா ஆட்சி கவிழாது.

மீதமுள்ள ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்வோம். சித்தராமையாவின் பேச்சுக்கு மதிப்பு கிடையாது. அவர் இன்னும் 3 ஆண்டுகள் காலம் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். கர்நாடக மேல்-சபை ஆசிரியர் தொகுதி வேட்பாளராக புட்டண்ணாவை தேர்வு செய்துள்ளோம். அவர் இதற்கு முன்பு 3 முறை ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதனால் அவருக்கு நாங்கள் பா.ஜனதாவில் டிக்கெட் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story