நாகர்கோவிலில் செம்மாங்குளம் கரை வழியாக ரெயில் நிலையத்துக்கு போக்குவரத்து வசதி - ஆணையர் சரவணகுமார் ஆய்வு


நாகர்கோவிலில் செம்மாங்குளம் கரை வழியாக ரெயில் நிலையத்துக்கு போக்குவரத்து வசதி - ஆணையர் சரவணகுமார் ஆய்வு
x
தினத்தந்தி 27 Nov 2019 4:00 AM IST (Updated: 27 Nov 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் செம்மாங்குளம் கரை வழியாக ரெயில் நிலையத்துக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒழுகினசேரியில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வாகனங்கள் செம்மாங்குளம் கரை வழியாக செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக செம்மாங்குளம் கரையை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், “நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டி உள்ளது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செம்மாங்குளம் கரை வழியாக ரெயில் நிலையத்துக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொதுப்பணித்துறை சார்பில் செம்மாங்குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. எனவே கரையில் அதிக மணல் கொட்டி வலுப்படுத்தி தருமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவ்வாறு கரையை வலுப்படுத்தி தந்தால் இசக்கியம்மன் கோவில் முன் இருந்து செம்மாங்குளம் கரை வழியாக மீனாட்சி கார்டன் சென்று அங்கிருந்து ரெயில் நிலையம் செல்ல சாலை அமைக்கப்படும். மேலும் தளவாய்தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்குள்ள கோவில் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு அந்த வழியாகவும் ரெயில் நிலையத்துக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும். இதன் மூலமாக போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.


Next Story