மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை - கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு + "||" + Security rehearsal to prevent the infiltration of militants in Kanyakumari Sea - Coast Guard intensive surveillance

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை - கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை - கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 'சவுகாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி,

மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி ஓட்டலில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நவம்பர் 26-ந்தேதி நடைபெற்றது.

இதையொட்டி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் குமரி கடல் பகுதியில் 'சவுகாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.


இந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி இன்று (புதன்கிழமை) காலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்று காலை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஒரு அதிநவீன படகில் சின்னமுட்டத்தில் இருந்து கூடங்குளம் வரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மற்றொரு படகில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் சின்னமுட்டத்தில் இருந்து நீரோடி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். மேலும், சந்ேதகப்படும் வகையில் படகுகள் கண்டால் உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் கூறினர்.

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையிலான போலீசார் கடற்கரை மணலில் ஓடும் நவீன ஜீப் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையும், 48 கடற்கரை கிராமங்களிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு - சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு
கன்னியாகுமரியில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிறவர்களை தனிமை படுத்தி வைத்துள்ள முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார். அப்போது, தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை பாராட்டினார்.
2. கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை
கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; கன்னியாகுமரியில் 31-ந்தேதி வரை படகு போக்குவரத்து ரத்து
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பதில்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் காங்கிரசார் நடத்திய பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.