வானவில் : கேனன் கேமரா பிரிண்டர்
கேனன் நிறுவனம் கையடக்கமான பாக்கெட் பிரிண்டரை அறிமுகம் செய்துள்ளது.
புகைப்படம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கேனன் நிறுவனம் கையடக்கமான பாக்கெட் பிரிண்டரை அறிமுகம் செய்துள்ளது. இது கேமராவையும் உள்ளடக்கியது. இந்த கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. கேனன் இஸட்.வி123. என்ற பெயரில் வந்துள்ள இந்த பிரண்டர் கேமராவில் பிளாஷ் லைட் உள்ளது. நான்கு கண்கவர் வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது.
இதில் உள்ள பிரிண்டரில் 36 X 24 மி.மீ. அளவுள்ள புகைப்படம் எடுக்கலாம். புளூடூத், என்.எப்.சி. இணைப்பிலும் செயல்படக் கூடியது. இதில் எஸ்.டி. கார்டு மூலம் 256 ஜி.பி. வரை சேமிக்க முடியும்.
இதில் உள்ள பிரிண்டரில் ஜிங்க் பிரிண்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விதவிதமாக புகைப்படங்களை எடுக்கலாம். உடனுக்குடன் பிரிண்ட்டும் போட்டுக் கொள்ளலாம். ஒரு புகைப்பட பிரிண்ட் எடுக்க 50 விநாடிகள் போதுமானது.
இந்த பிரிண்டரில் ஒரே சமயத்தில் 10 காகிதங்களை பயன்படுத்த முடியும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 பிரிண்ட் போட முடியும்.
Related Tags :
Next Story