வானவில் : ஜியோக்ஸ் ஸ்மார்ட் டி.வி.


வானவில் : ஜியோக்ஸ் ஸ்மார்ட் டி.வி.
x
தினத்தந்தி 27 Nov 2019 3:53 PM IST (Updated: 27 Nov 2019 3:53 PM IST)
t-max-icont-min-icon

40 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை ஜியோக்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

ஜியோக்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 40 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.37,999 ஆகும். இந்தியாவில் நிலவும் மின் அழுத்த வேறுபாடுகளைத் தாங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கண்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளதால், நீண்ட நேரம் டி.வி. பார்த்தாலும் பாதிப்பு ஏற்படாது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சரவுண்ட் சவுண்ட் பாக்ஸ் இருப்பதால் இனிய இசையை துல்லியமாக கேட்கலாம்.

இதில் 20 வாட் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவக வசதி கொண்டது. இது ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. இதில் ஸ்மார்ட் ரிமோட் தரப்படுகிறது.

இது குரல் வழி கட்டுப்பாடு மூலம் செயல்படக் கூடியது. இதில் நேவிகேஷன் வசதிக்கு கர்சர் மவுஸ் வசதியும் உள்ளது. ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி. போர்ட், வை-பை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

Next Story