வானவில் : ‘கூகா’வின் ஸ்மார்ட் டி.வி.க்கள்


வானவில் : ‘கூகா’வின் ஸ்மார்ட் டி.வி.க்கள்
x
தினத்தந்தி 27 Nov 2019 4:05 PM IST (Updated: 27 Nov 2019 4:05 PM IST)
t-max-icont-min-icon

டெலிவிஷன் தயாரிப்பில் முதல் முறையாக இறங்கியுள்ள கூகா நிறுவனம் மூன்று ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு டி.வி., ஸ்மார்ட் டி.வி., ஸ்மார்ட் ஈஸி டி.வி. என்ற பெயரில் இவை வந்துள்ளன. 32 அங்குலம் முதல் 55 அங்குலம் வரையிலான டி.வி.க்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குல டி.வி.யின் விலை ரூ.8,999 ஆகும். ஆண்ட்ராய்டு இயங்குதளம், டால்பி டிஜிட்டல் சவுண்ட், ஐ.பி.எஸ். பேனல், கூகுள் அசிஸ்டென்ட் மூலம் கட்டுப்படுத்தும் வசதி, குவாட் கோர் பிராசஸர் ஆகியன உள்ளது. இவற்றில் 1.75 ஜி.பி. ரேம் உள்ளது. இதில் ஆன்டிபுளூ லைட் என்ற தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இது கண்கள் சோர்ந்து போவதை தடுக்கும். இது புல் ஹெச்.டி. டி.வி.யாகும். இதில் 2 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 1 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. இதுவும் வை-பை மூலம் செயல்படக்கூடியது. லினெக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. இது 20 வாட் ஆடியோ இசையை வெளிப்படுத்தக் கூடியது.

ஆன்லைன் இணையதளமான பிளிப்கார்ட் மூலம் தனது டி.வி. விற்பனையைத் தொடங்கியுள்ளது இந்நிறுவனம்.

அடுத்த மாடலாக 50 அங்குல டி.வி. 4கே ரெசல்யூஷனைக் கொண்டதாக வந்துள்ளது. இதில் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. வை-பை மூலம் செயல்படும். இதில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளது. இதில் 8 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தைப் பார்ப்பதற்கு வசதியாக ரிமோட்டில் இதற்கென தனி பொத்தானும் உள்ளது.

55 அங்குல டி.வி. 4கே ரெசல்யூஷன் மற்றும் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டது. இதில் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட் வசதி உள்ளது. வை-பை மூலம் செயல்படக்கூடியது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தோடு 8 ஜி.பி. நினைவக வசதியும் கொண்டது. இதன் ரிமோட்டிலும் நெட்பிளிக்ஸுக்கு என தனி பொத்தான் உள்ளது. இந்திய தயாரிப்பாக வந்துள்ள இந்த டி.வி.க்கள் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. 55 அங்குல டி.வி.யின் விலை ரூ.31,999 ஆகும்.

Next Story