ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில், பணியில் இல்லாத 2 பெண் போலீசார் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்


ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில், பணியில் இல்லாத 2 பெண் போலீசார் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 28 Nov 2019 3:30 AM IST (Updated: 28 Nov 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் பணியில் இல்லாத 2 பெண் போலீசார் உள்பட 3 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 2 பெண் போலீசார் மற்றும் ஒரு ஆண் காவலர் உள்பட 3 பேர் பணியில் இல்லை.

இதனால் சம்பந்தப்பட்ட 3 போலீசாரிடமும் விசாரணை நடத்தி விளக்கம் பெற்று அனுப்பி வைக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

ஆயுதப்படைக்கு மாற்றம்

இந்த நிலையில் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் பணியில் இல்லாத ரேணுகா, மணிமேகலை, கார்த்திக் ஆகிய 3 போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story