ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 70 பவுன் நகை, ரூ.15 லட்சம் மோசடி வேலைக்கார பெண் மீது வழக்கு
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்் 70 பவுன் நகை, ரூ.15 லட்சம் மோசடி செய்த வீட்டு வேலைக்கார பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
எனது மாமியார் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற ஆசிரியை.. வயது மூப்பு காரணத்தால் அவரை வீட்டில் வைத்து கவனிக்க பார்வதிபுரம் சாரதா நகரை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரை வேலைக்கு அமர்த்தினேன்.
எனது மாமியாரிடம் ஆசைவார்த்தை கூறி ரூ.15 லட்சம், 70 பவுன் நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை ராஜலட்சுமி மோசடி செய்து எடுத்து சென்றுவிட்டார்.
பெண் மீது வழக்கு
இந்த நிலையில் கடந்த சில மாதத்துக்கு முன்பு எனது மாமியார் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரிடம் இருந்த பணத்தையும், நகையையும் ராஜலட்சுமியிடம் கேட்டபோது, அவர் என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தையும், நகையையும் மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வடசேரி போலீசார் ராஜலட்சுமி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Tags :
Next Story