மாவட்டத்தில் ரூ.6,448 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் திட்ட அறிக்கையை வெளியிட்டார்
நாமக்கல் மாவட்டத்தில் வளம் சார்ந்த பணிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 448 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் மெகராஜ் வெளியிட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தின் 2020-2021-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நபார்டு வங்கியின் 2020-21-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் நாமக்கல் மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ.6 ஆயிரத்து 448 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்தாண்டை விட 10 சதவீதம் கூடுதல் ஆகும்.
இதில் குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.2 ஆயிரத்து 603 கோடியும், வேளாண் தொழில் சார்ந்த விவசாய கட்டமைப்புகள், உணவு மற்றும் பயிர் பதனிடு தொழில்கள் காலக்கடனாக ரூ.1,340 கோடியும் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னுரிமை கடன் கொள்கையின்படி ஏற்றுமதி கடன் ரூ.123 கோடியும், கல்வி கடன் ரூ.87 கோடியும், வீடு கட்டுமான கடன்கள் ரூ.260 கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு கடனாக ரூ.122 கோடியும், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கூட்டு பொறுப்புக்குழுக்களுக்கு கடனாக ரூ.690 கோடியும் என பல்வேறு கடன் உதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் முன்னேற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் மற்றும் அதனை சார்ந்த தொழில்களை விரைந்து மேம்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்னேற்றம் காணும் வகையில் வங்கிகள் அதிகளவில் கடன் உதவிகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் மணி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் சுசீலா பார்த்தசாரதி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் தினேஷ், உதவி பொது மேலாளர்கள் மோகன்குமார் (ரிசர்வ் வங்கி), தாமோதரன் (இந்தியன் வங்கி), முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜூ உள்பட அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story