பா.ஜனதா ஆட்சி அமைக்க அஜித்பவார் ஆதரவு அளித்தது ஏன்? தேவேந்திர பட்னாவிஸ் பதில்


பா.ஜனதா ஆட்சி அமைக்க அஜித்பவார் ஆதரவு அளித்தது ஏன்? தேவேந்திர பட்னாவிஸ் பதில்
x
தினத்தந்தி 28 Nov 2019 5:42 AM IST (Updated: 28 Nov 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ஆட்சி அமைக்க அஜித்பவார் ஆதரவு அளித்தது ஏன்? என்று தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த 23-ந்தேதி அதிரடி திருப்பமாக சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது.

4 நாட்கள் மட்டுமே பதவி நீடித்த இந்த அரசுக்கு அஜித்பவார் ஆதரவு அளித்து துணை முதல்-மந்திரியானது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது. 

ஊழல் வழக்குகளை காட்டி அவரை மிரட்டி பாரதீய ஜனதா ஆட்சி அமைத்ததாக சிவசேனா குற்றம் சாட்டியது. 

இது குறித்து சட்டசபையில் எம்.எல்.ஏ. பதவி ஏற்க வந்த தேவேந்திர பட்னாவிசிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அவர், “அஜித்பவார் ஆதரவு அளித்தது குறித்து சரியான நேரம் வரும்போது விளக்கம் அளிக்கிறேன்” என்று மட்டும் தெரிவித்தார்.

Next Story