உத்தனப்பள்ளியில் தங்கும் விடுதி மேலாளர் வீட்டில் 10½ பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு


உத்தனப்பள்ளியில் தங்கும் விடுதி மேலாளர் வீட்டில் 10½ பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Nov 2019 3:45 AM IST (Updated: 28 Nov 2019 9:34 PM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளியில் தங்கும் விடுதி மேலாளர் வீட்டில் 10½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராயக்கோட்டை, 

உத்தனப்பள்ளி பாலாஜி நகர் முதல் கிராசை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 58). இவர் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவைக்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் வீட்டில் 2 பீரோவில் வைத்திருந்த 10½ பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் வெங்கடாசலத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையொட்டி அவர் வீட்டிற்கு வந்தார். பின்னர் நகைகள் திருட்டு போனது குறித்து உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். நகைகள் திருட்டு போன சம்பவம் உத்தனப்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story