5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2019 4:15 AM IST (Updated: 28 Nov 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டதை கண்டித்தும், இந்த பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரியும் திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில துணை செயலாளர் பிரகா‌‌ஷ் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அரவிந்த்சாமி, மாவட்ட செயலாளர் சுர்ஜித், மாவட்ட துணை செயலாளர் சந்தோ‌‌ஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story