தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் இளந்தளிர் விருது கலைப்போட்டிகள் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் இளந்தளிர் விருது கலைப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 1000 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர்,
தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக பாரம்பரிய வாரத்தினை முன்னிட்டு தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் ஆண்டு தோறும் இளந்தளிர் விருது கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 9-வது ஆண்டாக கலைப்போட்டி கடந்த 27-ந்தேதி தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தென்னகபண்பாட்டு மையம், கலை ஆயம், தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை, இந்திய தேசிய பாரம்பரிய கலைப்பண்பாட்டு அறக்கட்டளை, தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம் இணைந்து இந்த போட்டியை நடத்தி வருகிறது.
பரதநாட்டியம்
5 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாள் குரலிசை மற்றும் செவ்வியல் கருவி இசை போட்டிகள் நடைபெற்றன. நேற்று 2-வது நாள் பரதநாட்டிய போட்டிகள் நடைபெற்றன. இதில் தனி நபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் 8 முதல் 12 வயது வரை ஒரு பிரிவாகவும், 13 முதல் 17 வயது வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் 1000 பேர் கலந்து கொண்டனர்.இன்று (வெள்ளிக்கிழமை) 3-வது நாள் நாட்டுப்புற பாடல் மற்றும் நாட்டுப்புற கருவி இசை போட்டிகள் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) நாட்டுப்புற நடனம் தனி மற்றும் குழு போட்டிகளும், 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடகப்போட்டி தனி மற்றும் குழுவாகவும் நடைபெறுகிறது.
இளந்தளிர் விருது
இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறுகையில், 5 நாட்கள் இந்த கலை போட்டிகள் நடைபெறுகிறது. அழிந்து வரும் கலைகளை வளர்க்கும் வகையிலும், மாணவர்கள் தங்களின் திறனை வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இளந்தளிர் விருது வழங்கப்படும்’’என்றார்.

Related Tags :
Next Story