நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Nov 2019 10:30 PM GMT (Updated: 28 Nov 2019 9:51 PM GMT)

சேலம் காக்காயன்காடு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ள காக்காயன்காடு நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ள இயற்கை உரத்தின் தரத்தினை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- மாநகராட்சி பகுதியில் 13 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 17 மையங்களுக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரம் தயாரிப்பு மையங்களுக்கு தினசரி 120 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மையங்களில் விஞ்ஞான முறையில் உரம் தயாரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் அளவிலான மக்கும் கழிவுகள் உரமாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் இதுவரை 13 நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் மூலம் 150 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. இவை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர்கள் சித்தேஸ்வரன், கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.



Next Story