உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு; புதிய கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டம் அறிவிப்பு
மராட்டியத்தில் 80 சதவீத வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு கிடைப்பதற்கு வசதியாக சட்டம் இயற்றப்படும், விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என மகா விகாஷ் முன்னணி அறிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் உதயமான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி கூட்டணி நேற்று ஆட்சி அமைத்தது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மகா விகாஷ் கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்களை தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். மாநில வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு ரூபாய் ஆஸ்பத்திரிகள் தொடங்கப்படும்.
மாநிலம் முழுவதும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு 10 ரூபாய்க்கு முழுசாப்பாடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story