வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை


வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 29 Nov 2019 4:15 AM IST (Updated: 29 Nov 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

வில்லியனூர்,

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரிபவர்களுக்கு தினக்கூலியாக ரூ.229 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வில்லியனூர் வட்டார பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு தினக்கூலியாக ரூ.190 மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், மற்ற பகுதிகளில் வழங்குவதுபோல், கூலி வழங்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்துக்கு கட்சியின் தொகுதி செயலாளர் தமிழ்வளவன் தலைமை தாங்கினார். ஆதவன், எழில்மாறன், வாகை அரசு, கதிர்வேலு, சுடர்ஒளி, தயாநிதி ஏகாம்பரம் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்ட னர். இவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர். இதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story