நெல்லை அருகே, கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு


நெல்லை அருகே, கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 30 Nov 2019 4:00 AM IST (Updated: 29 Nov 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி கீழே விழுந்து பலியானார்.

நெல்லை, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 42). சம்பவத்தன்று ராஜேந்திரன், மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்க்க நெல்லை அருகே உள்ள தாழையூத்துக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். தாழையூத்தை கடந்து சென்ற போது ஒரு பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கிய போது, பின்னால் அமர்ந்திருந்த லட்சுமி தவறி கீழே விழுந்தார்.

இதில் லட்சுமி பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story