திருவாரூர் மாவட்டத்தில் செல்போன் திருடிய 3 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் செல்போன் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் செல்போன் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கடந்த 2 மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் மாவட்டம் முழுவதும் செல்போன் திருட்டு செயலில் ஈடுபட்ட மன்னார்குடி பாமணியை சேர்ந்த நெப்போலியன் (வயது 28), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த செல்வம் (21), அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (25) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 154 செல்போன்கள் பறிமுதல் ெசய்யப்பட்டன.
செல்போன் திருடியவர்களை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு துரை பாராட்டினார். இதையடுத்து செல்போன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சயில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுகுமாறன், பழனிச்சாமி, கார்த்திக், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story