மந்திராலயாவில் முதல்-மந்திரி அலுவலகம் சென்று உத்தவ் தாக்கரே அரசு பணிகளை தொடங்கினார்


மந்திராலயாவில் முதல்-மந்திரி அலுவலகம் சென்று உத்தவ் தாக்கரே அரசு பணிகளை தொடங்கினார்
x
தினத்தந்தி 30 Nov 2019 5:36 AM IST (Updated: 30 Nov 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே மந்திராலயா சென்று அரசு பணிகளை தொடங்கினார்.

மும்பை, 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நடந்த விழாவில் மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 6 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.

உத்தவ் தாக்கரே பதவி ஏற்றதை தொடர்ந்து, தென்மும்பை நரிமன்பாயிண்டில் உள்ள மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடத்தின் 6-வது மாடியில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்தில் வெளிப்பகுதியில் 'உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என பெயர் பலகை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மதியம் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து உத்தவ் தாக்கரே மந்திராலயாவுக்கு புறப்பட்டார். தென்மும்பை உத்தாத்மா சவுக் பகுதியில் காரை நிறுத்தி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து மந்திராலயா வந்தடைந்த உத்தவ் தாக்கரே அங்கு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் உத்தவ் தாக்கரே மந்திராலயாவின் 6-வது மாடியில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு பிற்பகல் 2 மணியளவில் சென்றார். அங்கு முதல்-மந்திரி இருக்கையில் அமர்ந்து அவர் தனது அரசு பணிகளை தொடங்கினார். அப்போது அவரது மூத்த மகனும், ஒர்லி எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரே உடன் வந்து இருந்தார்.

முன்னதாக மந்திராலயா வந்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Next Story