ஏ.சி. எந்திரம் பொருத்தும்போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி


ஏ.சி. எந்திரம் பொருத்தும்போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 1 Dec 2019 4:30 AM IST (Updated: 1 Dec 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஏ.சி. எந்திரம் பொருத்தும்போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஏ.சி.மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம், 

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன்(வயது 30). ஏ.சி. மெக்கானிக். இவர், நேற்று காலை மாதவரம் மேம்பாலம் அருகே ஒருவர் புதிதாக கட்டிவரும் 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏ.சி. எந்திரங்கள் பொருத்தும் பணியில் சகதொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் ஏ.சி. எந்திரம் பொருத்தும்போது எதிர்பாராதவிதமாக பாலச்சந்திரன், அங்கிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார், பலியான பாலச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான பாலச்சந்திரனுக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். தற்போது அவர், 4 மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story