திருவள்ளூர் அருகே, மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
திருவள்ளூர் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சோகண்டி பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பீகார் மாநிலம் குடைப்பூர் கிராமத்தை சேர்ந்த தீபக் குமார் (வயது 17) தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதியன்று தீபக்குமார் தன்னுடன் பணிபுரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுபாங்கர் என்பவருடன் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் மப்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சுபாங்கர் ஓட்டிச் சென்றார். தீபக்குமார் பின்னால் அமர்ந்து சென்றார்.
அந்த மோட்டார் சைக்கிள் திருவள்ளூரை அடுத்த பண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன சுபாங்கர் திடீரென பிரேக் பிடித்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அருகில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் சுபாங்கர் காயமின்றி தப்பினார். பின்னால் அமர்ந்து வந்த தீபக்குமார் படுகாயம் அடைந் தார். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த தீபக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story