மாவட்ட செய்திகள்

அனைத்து ரே‌‌ஷன்கடைகளிலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன அமைச்சர் பேட்டி + "||" + Essential items in all ration shops are reserved

அனைத்து ரே‌‌ஷன்கடைகளிலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன அமைச்சர் பேட்டி

அனைத்து ரே‌‌ஷன்கடைகளிலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன அமைச்சர் பேட்டி
அனைத்து ரே‌‌ஷன்கடைகளிலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
மன்னார்குடி,

நீடாமங்கலம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் நேற்று மன்னார்குடியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதில் முன்னாள் நகராட்சி தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், முன்னாள் நீடாமங்கலம் ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் அரிகிரு‌‌ஷ்ணன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க சாதாரண மக்களுக்காக பணியாற்றிய இயக்கம். ஜெயலலிதா வலிமைப்படுத்திய இந்த இயக்கத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி திறம்பட நடத்தி செல்வதால் நம்பிக்கை ஏற்பட்டு உள்ள பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து நாடகமாடி வருவதாக தெரிவிப்பது வேடிக்கையானது.

கால அவகாசம்

தன்னுடைய இருப்பை காட்டி கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எதிர் கருத்துக்களை தெரிவிக்கிறார். இதுபோன்ற கமல்ஹாசனின் கருத்துக்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரை கமல்ஹாசன் போன்றவர்கள் ஒரு பொருட்டல்ல. இது ஒரு மக்கள் இயக்கம், எதார்த்தத்தை மக்களிடத்தில் சொல்லி தேர்தலை எதிர் கொள்கின்ற இயக்கம். வடகிழக்கு பருவமழைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரே‌‌ஷன் கடைகளிலும் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்வதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது. கால அவகாசம் நீட்டிப்பு குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசித்து பிறகு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாயமான மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் சாலை மறியல் அமைச்சர் ஜெயக்குமார் சமரசம்
காசிமேட்டில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்க கோரி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் ஜெயக்குமார் சமரசம் செய்து வைத்தார்.
2. எனக்கும், குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. பேட்டி
எனக்கும், என்னுடைய குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அகண்ட சீனிவாசமூர்த்தி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
3. கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில்தான் கவனம் உள்ளது:“நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை” அமைச்சர் பேட்டி
“கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் தான் எங்கள் கவனம் உள்ளது. நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
4. மூணாறு நிலச்சரிவில் பலியானவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்
மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.
5. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு
அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...