ஆஸ்பத்திரியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் நிதி மந்திரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை


ஆஸ்பத்திரியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் நிதி மந்திரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 9:36 PM GMT)

ஆஸ்பத்திரியில் இருந்தபடியேகாணொலி காட்சிமூலம் நிதி மந்திரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர்நாராயணசாமி கால்வலிகாரணமாக சென்னை சிம்ஸ்ஆஸ்பத்திரியில் மூட்டுஅறுவை சிகிச்சைசெய்து கொண்டார்.இந்தநிலையில்அவர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்தபடியே பிற மாநில நிதி மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்காக ஆஸ்பத்திரியில்காணொலிகாட்சிக்கு (வீடியோ கான்பரன்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்மூலம் அவர் பிற மாநில நிதி மந்திரிகளுடன் ஆலோசித்தார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின்அலுவலக செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:-

இழப்பீடு தொகை

சரக்கு மற்றும் சேவை வரியில் மாநில அரசுகளுக்குரிய பங்கு மற்றும் இழப்பீட்டு தொகையை உரிய காலத்தில் வழங்கவேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தும் விதமாக மாநில நிதி மந்திரிகள் பங்கேற்கும்காணொலி காட்சி கூட்டத்துக்கு கேரளமாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி நேற்று காலை 10.30 மணியிலிருந்து 11 மணிவரை நடைபெற்றகாணொலி காட்சி கூட்டத்தில்கேரளா, பஞ்சாப்,மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நிதி மந்திரிகள்கலந்துகொண்டுதங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

காணொலிகாட்சி

புதுச்சேரி யூனியன் பிரதேசமும் இத்தகையநெருக்கடியினை சந்தித்துவருகிறது. எனவே மிகவும் முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படும்இந்த கூட்டத்தில்கலந்துகொள்வது இன்றியமையாதது என்றுகருதி சென்னைஆஸ்பத்திரியில் மூட்டு வலிக்கான சிறுஅறுவை சிகிச்சைக்குப்பின்தற்போது டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் பூரண ஓய்வில் இருக்கும் முதல்-அமைச்சர்நாராயணசாமி காணொலி காட்சி கூட்டத்தில்பங்கேற்க முடிவு செய்தார்.

அதன்படி நேற்று நடந்தகாணொலிகாட்சி கூட்டத்தில்ஆஸ்பத்திரியில் இருந்தபடியேபங்கேற்று புதுச்சேரிமாநிலத்தின் நிதி உரிமைகள், மத்தியநிதிக்குழுவில்புதுச்சேரியை சேர்ப்பதுஆகியவைகுறித்து தன்னுடையகருத்துகளை எடுத்துரைத்தார்.


Next Story