அரியலூர் மாவட்டத்தில் 238 பயனாளிகளுக்கு ரூ.79½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்


அரியலூர் மாவட்டத்தில் 238 பயனாளிகளுக்கு ரூ.79½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 4:50 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 238 பயனாளிகளுக்கு ரூ.79½ லட்சத்தில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டார். விழாவில் சமூக நலத்துறையின் சார்பில் ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து, கொண்ட 2 தாய்மார்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வைப்புநிதி பத்திரங்களும், 2 பெண் குழந்தைகள் பெற்ற 150 தாய்மார்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வைப்புநிதி பத்திரங்களும், 50 ஏழை பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்களையும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு...

மேலும் அவர் வருவாய்த்துறையின் சார்பில் 30 இந்து இருளருக்கு சாதி சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 460 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகளையும் வழங்கி பேசினார். நடந்த விழாவில் மொத்தம் 238 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.79 லட்சத்து 35 ஆயிரத்து 460 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story