மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை - காவேரிப்பாக்கத்தில் 78 மில்லி மீட்டர் பதிவானது + "||" + Rain in the Vellore district

வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை - காவேரிப்பாக்கத்தில் 78 மில்லி மீட்டர் பதிவானது

வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை - காவேரிப்பாக்கத்தில் 78 மில்லி மீட்டர் பதிவானது
வேலூர் மாவட்டத்தில் விடிய விடிய மழைபெய்தது. காவேரிப்பாக்கத்தில் 78 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வேலூர், 

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் காலைமுதலே வேலூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான மழையும் பெய்தது. மாலையில் மழையின் வேகம் அதிகரித்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இரவிலும் தொடர்ந்து பெய்த மழை விடிய விடிய நீடித்தது. நேற்று காலைவரை மழைபெய்தது. அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். இந்த மழை காரணமாக வேலூரில் குளிர்ந்த காற்றுவீசியது.

2-வது நாளாக நேற்று அதிகாலை முதலே மழைபெய்தது. தொடர்ந்து சாரல்போன்று தூறிக்கொண்டே இருந்தது. இதனால் வேலூரில் சூரியனையே பார்க்க முடியவில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடங்கி உள்ளது. அதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மழை பெய்தது. அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 78 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.

2 மாவட்டங்களில்நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

காவேரிப்பாக்கம்- 78, அரக்கோணம்- 58, வேலூர்- 54.1, சோளிங்கர்- 47, மேலாலத்தூர்- 46.6, குடியாத்தம்- 41.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. வேலூரில் 2 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை: கஸ்பாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
வேலூரில் 2 மணிநேரம் கொட்டித்தீர்த்த மழையால், கஸ்பாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
3. வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.