மாவட்ட செய்திகள்

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதட்டிய விசைப்படகு பொக்லின் எந்திரங்கள் மூலம் மீட்பு + "||" + Rescued by floating boglin machines at the ancient fishing harbor

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதட்டிய விசைப்படகு பொக்லின் எந்திரங்கள் மூலம் மீட்பு

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதட்டிய விசைப்படகு பொக்லின் எந்திரங்கள் மூலம் மீட்பு
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதட்டிய விசைப்படகு பொக்லின் எந்திரங்கள் மூலம் மீட்கப்பட்டது.
கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுனாமி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிலம்பரசன் (33) என்பவர் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய போது பழையாறு துறைமுகத்தின் அருகில் முகத்துவாரத்தில் விசைப்படகு தரைதட்டி நின்றது. இதையடுத்து மீனவர்கள் படகுகள் மூலம் 5 மணி நேரம் போராடி தரைதட்டிய விசைப்படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொக்லின் எந்திரங்கள் மூலம் விசைப்படகு மீட்கப்பட்டு, கரைக்கு இழுத்து கொண்டு வரப்பட்டது. இதனால் விசைப்படகின் என்ஜின் பாதிப்படைந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. செந்துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பெரிய ஏரிக்கு வந்த மழைநீர் விவசாயிகள் மகிழ்ச்சி
செந்துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பெரிய ஏரிக்கு வந்த மழைநீரை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2. கீழடியில் அகழாய்வு பணி: புதிதாக 2 மண்பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு
கீழடியில் அகழாய்வு பணியில் புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
3. கொரோனா தடுப்பு பணி சென்னையில் மேலும் 2 ஆயிரம் செவிலியர்கள் நியமனம்
சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் 2 ஆயிரம் செவிலியர்களை தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்து உள்ளது.
4. உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு
உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 1-ந் தேதி தொடக்கம்: வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் இ-பாஸ் வழங்க வசதியாக வெளி மாவட்ட மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கிடையே வினாத்தாள் கட்டு காப்பகத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.