மாவட்ட செய்திகள்

கோவை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் - காதலன் கைது + "||" + Coimbatore College student nude videos Upload on Facebook - boyfriend arrested

கோவை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் - காதலன் கைது

கோவை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் - காதலன் கைது
கோவை கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்கள் முகநூலில் பதிவேற்றம் செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம்குறித்து போலீஸ்தரப்பில்கூறப்படுவதாவது:-
சூலூர்,

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர்பரமேஸ்வரன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 19). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவருடைய ஊரைச்சேர்ந்த20 வயது இளம்பெண், கோவையை அடுத்த சூலூர் அருகே தங்கி இருந்து ஒரு கல்லூரியில் 2-ம்ஆண்டு படித்துவருகிறார்.

அஜித்குமாரும், அந்த மாணவியும் சொந்த ஊரில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதால் நட்பாக பழகினார்கள். பின்னர் அந்தநட்பு காதலாக மாறியது. இருவரும் செல்போனில் தினமும் வாட்ஸ்- அப் மூலம் வீடியோகால் பேசி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடையே நெருக்கம் அதிகரித்ததால் நிர்வாண நிலையில் செல்போன்மற்றும் கணினியில் வீடியோகால் பேசியதாக தெரிகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அஜித்குமார் அந்த மாணவி நிர்வாண நிலையில் இருந்த வீடியோக்களை தனியாக சேமித்து வைத்து கொண்டார். இதையடுத்து அடிக்கடி அந்த மாணவியை ஆடை இல்லாமலும், குளிக்கும் போதும் வீடியோ எடுத்து அனுப்ப சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

தனது காதலன்தானே கேட்கிறாா், வேறு யாருக்கும் அந்த வீடியோக்களை அனுப்ப மாட்டார் என்று நினைத்த அந்த மாணவி, தான் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவைதனது செல்போனில் எடுத்து காதலனுக்கு அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் அவர்களுக்கு இடையே திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அந்த மாணவி, அஜித்குமாரிடம் சரியாக பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் தன்னிடம் இருந்த அந்த கல்லூரி மாணவியின் நிர்வாண வீடியோக்களை முகநூலில் (பேஸ்புக்)பதிவேற்றம் செய்து உள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அஜித்குமாரிடம் கேட்டபோது, இதுகுறித்து போலீசில்புகார் செய்தால் முகத்தில் திராவகம் வீசி கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.இதை தனது பெற்றோரிடம் கூறி அந்த மாணவி கதறி அழுதுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தனர். அத்துடன் அவர் தனது செல்போன் மற்றும் வீட்டில் இருந்த கணினியில் சேமித்து வைத்து இருந்த அந்த மாணவியின் நிர்வாண வீடியோக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அஜித்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில்அடைத்தனர்.

காதலியின் நிர்வாண வீடியோக்களை காதலனே முகநூலில் பதிவேற்றிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு
பொன்னேரி அருகே ஆன்லைன் பாடம் புரியாததால் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. யாதகிரி அருகே, தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது கடத்தி கற்பழிப்பு; கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
யாதகிரி அருகே தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது 4 நபர்களால் கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.