வாழப்பாடி வட்டார விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா


வாழப்பாடி வட்டார விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா
x
தினத்தந்தி 1 Dec 2019 10:00 PM GMT (Updated: 1 Dec 2019 7:43 PM GMT)

வாழப்பாடி வட்டார விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வாழப்பாடி, 

வாழப்பாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் அட்மா முகமை திட்டத்தின் சார்பில் 50 விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவாக நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். பால் பண்ணையில் மாடு வளர்ப்பு, தடுப்பு மருந்து கொடுக்கும் முறை, தீவனம் அளித்தல் கொம்பு நீக்குதல், கன்று பராமரித்தல், கொட்டகை அமைக்கும் முறை ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விவரிக்கப்பட்டன. மேலும் பண்ணையில் பஞ்சாப் வகை மாடுகள் வளர்க்கப்படுவதை அவர்கள் பார்வையிட்டனர்.

Next Story