காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி


காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 7:43 PM GMT)

காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஓமலூர்,

ஓமலூரில் கடந்த மாதம் முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதில், மாற்றுத்திறனாளிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சரிடம் வழங்கினர். முகாமில் பெறப்பட்ட காடையாம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் காடையாம்பட்டி தாசில்தார் மகே‌‌ஷ்வரி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிரு‌‌ஷ்ணன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சித்தே‌‌ஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றிவேல் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், 198 பயனாளிகளுக்கு ரூ.23.76 லட்சம் மதிப்பிலான முதியோர் ஓய்வூதியம், 12 பயனாளிகளுக்கு ரூ.31, 812 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இதில் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சுந்தரராஜன், ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் ராணிசேகர், ஒன்றிய இணை செயலாளர் கோகிலா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுப்பிரமணியம், ஓமலூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story