உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அடுத்த மாதம் நிரப்பப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அடுத்த மாதம் நிரப்பப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 8:28 PM GMT)

உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அடுத்த மாதம் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நம்பியூர், 

நம்பியூர் பேரூராட்சி, எலத்தூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15 ஊராட்சிகளில் சாலை வசதி, கழிப்பறை என ரூ.87 கோடிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் திறப்பு விழா நம்பியூரில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு நம்பியூர் பேரூராட்சி செயல் அதிகாரி சசிகலா தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்துகொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். எலத்தூர் பேரூராட்சி செயலாளர் சேரன் சரவணன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சந்திரசேகர், ராமசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணி இடங்களும் 2 மாதத்துக்குள் நிரப்பப்படும். அதனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்காது. கணினி ஆசிரியர்களும், சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

இதேபோல் 4,017 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு் தேர்வு நடத்தி நியமனம் செய்யப்படும். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில், எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும்போது ஒவ்வொரு முறையும் யாராவது வழக்கு தொடர்ந்து விடுகிறார்கள். இனி அதை தவிர்க்க ஆசிரியர்

அரசுப்பள்ளிக்கூடங்களில் குடிநீர், கழிப்பறை வசதியை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள், ெதாழில்அதிபர்களை அழைத்து பேச உள்ளோம். செயல்படாத பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்.

உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களை் நிரப்புவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. அதனால் அடுத்த மாதம்(ஜனவரி) உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story