மாவட்ட செய்திகள்

துவாக்குடியில் கார் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி அரசு மரியாதையுடன் உடல் தகனம் + "||" + Car collided in Dukakudi Sub-Inspector Kills Government Honor

துவாக்குடியில் கார் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி அரசு மரியாதையுடன் உடல் தகனம்

துவாக்குடியில் கார் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி அரசு மரியாதையுடன் உடல் தகனம்
துவாக்குடியில் கார் மோதியதில் படுகாயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார். அவரது உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
துவாக்குடி,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காமராஜபுரம் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஜெயக்குமார்(வயது 58). இவர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரத்தினம்(49). இவர்களுக்கு பவித்ரா(25), ஐஸ்வர்யா(24), அக்சயா(19)ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான பவித்ராவிற்கு திருமணமாகி விட்டது.


இந்நிலையில், இரவுப்பணி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு தனது ஸ்கூட்டரில் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடல் அடக்கம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரை மீட்டு அருகே உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பாபநாசத்தை சேர்ந்த கனகராஜ் (36) என்பவரை கைது செய்தனர்.

இறந்த ஜெயக்குமாரின் உடல், துவாக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அருள் சக்திகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் ஓயாமரி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. விபத்தில் இறந்த ஜெயக்குமார் வருகிற ஜூன் மாதம் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை - ஆஸ்பத்திரிகளில் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்
ஆஸ்பத்திரிகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2. திருச்சியில் பயங்கரம் வாலிபரை கொன்று உடல் எரிப்பு நண்பர்கள் 3 பேர் சிக்கினர்
திருச்சியில் வாலிபரை கொலை செய்து உடலை எரித்த நண்பர்கள் 3 பேர் சிக்கினர்.
3. நாமக்கல் அருகே 2 பெண்டாட்டிக்காரர் கிணற்றில் தவறி விழுந்து சாவு அழுகிய நிலையில் உடல் மீட்பு
நாமக்கல் அருகே 2 பெண்டாட்டிக்காரர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. உடல்களை தகனம் செய்ய ரூ.8 ஆயிரம் கேட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள்: உறவினர்கள் போராட்டம்- பரபரப்பு
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தாய்-மகளின் உடல்களை தகனம் செய்ய கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ரூ.8 ஆயிரம் கேட்டனர். இதனை கண்டித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
5. குறும்பனையில் ராட்சத அலை இழுத்து சென்ற மாணவரின் உடல் ஆழ்கடலில் மீட்பு
குறும்பனையில் ராட்சத அலை இழுத்து சென்ற மாணவரின் உடல் ஆழ்கடலில் மீட்கப்பட்டது.