லஞ்சப்புகாரில் சிக்கிய, மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை


லஞ்சப்புகாரில் சிக்கிய, மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 9:03 PM GMT)

லஞ்சப்புகாரில் சிக்கிய மதுரை அரசு ஆஸ்பத்திரி செவிலிய உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா் தனிக்கொடி. இவரது மருமகள் லோகநாயகி, பிரசவத்திற்காக ராஜாஜி ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 15-ந்தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவரிடம் செவிலிய உதவியாளா் காா்த்திகா என்பவா் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் செவிலிய உதவியாளா் காா்த்திகா மதுரை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் உள்ள காா்த்திகாவின் வீடு நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், வீட்டின் ஜன்னல் வழியாக பாா்த்தபோது, காா்த்திகா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினா் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் திலகா்திடல் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தற்கொலை செய்து கொண்ட காா்த்திகா, குடும்ப பிரச்சினையின் காரணமாக, தனது கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவர், குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா?, லஞ்சப்புகாரில் சிக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்தாரா? என போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story