மாவட்ட செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால் கொண்டு வாருங்கள் + "||" + Bring new tools to rescue children who fall into a deep well

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால் கொண்டு வாருங்கள்

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால் கொண்டு வாருங்கள்
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால் கொண்டு வாருங்கள் என்று பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் விழுந்து பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடிக்க அனைத்து கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கிராமத்தை சேர்ந்த அய்யாபிள்ளை என்பவர் புதிய கருவியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டார். தீயணைப்புத்துறை திருச்சி மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் வழிகாட்டுதலின்படி சென்னை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை இயக்குனரகத்தில் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபுவை, அய்யாபிள்ளை நேரில் சந்தித்தார்.


மக்கள் பயன்பெறும் வகையில்...

பின்னர் தான் கண்டுபிடித்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து தீயணைப்புத்துறை இயக்குனர் முன்னிலையில் விளக்கம் அளித்தார். மேலும் திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்தார். இதை பார்த்த தீயணைப்புத்துறை இயக்குனர் அய்யாபிள்ளையை பாராட்டியதுடன், அந்த கருவியை மேம்படுத்த ஊக்கமும் ஆலோசனையும் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் எவரேனும் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால், அதை பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு கொண்டு வாருங்கள், அதன் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்து, மக்கள் பயன்பெறும் வகையில் இருக்க செய்ய தீயணைப்புத்துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும்போது அரசு விதிகளை பின்பற்ற வலியுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி களில் அரசு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
2. குமரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 72 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன அதிகாரி தகவல்
குமரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 72 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3. கொத்தமங்கலத்தில் ஆபத்தான நிலையில் 10 ஆழ்துளை கிணறுகள் இளைஞர்களே பாதுகாப்பாக மூட முடிவு
கொத்தமங்கலத்தில் பயன்பாடு இன்றி ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை கணக்கெடுத்த இளைஞர் மன்றத்தினர் அந்த ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேமிக்கவும், பாதுகாப்பாக மூடவும் முடிவு செய்துள்ளனர்.
4. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்பதில் கடும் சவால் இரவு - பகலாக போராடுகிறார்கள்
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற மீட்புக்குழுவினர் இரவு-பகலாக போராடுகிறார்கள். கடின பாறைகளை உடைக்க எந்திரங்கள் திணறுவதால், குழந்தையை மீட்பதில் கடும் சவால் ஏற்பட்டு உள்ளது.
5. குழந்தை சுர்ஜித்தை மீட்க புது முயற்சி; பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முடிவு
ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை சுர்ஜித் 85 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.