கப்பலூர் சுங்கச்சாவடியில் முன்கூட்டியே ‘பாஸ்டேக்’ முறை கடைபிடிப்பு - வாகன ஓட்டிகள் அதிருப்தி


கப்பலூர் சுங்கச்சாவடியில் முன்கூட்டியே ‘பாஸ்டேக்’ முறை கடைபிடிப்பு - வாகன ஓட்டிகள் அதிருப்தி
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 9:48 PM GMT)

பாஸ்டேக் முறையை அமல்படுத்த அவகாசம் கொடுத்து இருந்த நிலையில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் முன்கூட்டியே அமல் படுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தார்கள். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

திருமங்கலம், 

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை வாகனங்கள் வேகமாக கடந்து செல்ல வசதியாக பாஸ்டேக் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனை கடந்த 1-ந் தேதி முதல் அமல் படுத்த இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் 15-ந் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் நேற்று பாஸ்டேக் முறை திடீரென்று அமல் படுத்தப்பட்டது. இங்கு 10 கட்டண கவுண்ட்டர்கள் இருந்தன. இதில் 1 மற்றும் 10-வது கவுண்ட்டர் மட்டும் பணம் கொடுத்து வசூல் செய்யும் முறைக்கு அனுமதிக்கப்பட்டது. 2 முதல் 9 வரை உள்ள கவுண்டர்கள் பாஸ்டேக் முறையாக மாற்றப்பட்டன.

பாஸ்டேக் பெறாத வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் 2 கவுண்டர்கள் வழியாக மட்டுமே செல்ல வேண்டியிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தார்கள்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, அரசு 15-ந்்தேதி வரை அனுமதி அளித்து உள்ள நிலையில் தற்போதே அமல் படுத்தியதால் கூட்ட நெரிசல் அதிகம் ஆகிவிட்டது எனத் தெரிவித்தனர். இது அரசு உத்தரவை மீறிய செயல் எனவும் அதிருப்தியுடன் தெரிவித்தனர்.

Next Story