மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி: சாம்பியன் பட்டத்தை குமரி அணி வென்றது


மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி: சாம்பியன் பட்டத்தை குமரி அணி வென்றது
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 9:52 PM GMT)

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை குமரி அணி வென்று கோப்பையை தட்டி சென்றது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கி, 2 நாட்கள் நடந்தது

இதில் கன்னியாகுமரி, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட 24 மாவட்டங்களில் இருந்து 30 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் என ெமாத்தம் 800 பேர் கலந்து கொண்டனர்.

ஒட்டுமொத்த சாம்பியன்

நடைபோட்டி, ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று மாலை பரிசளிப்பு விழா நடந்தது.

இந்த போட்டிகளில் அதிக பதக்கங்களை பெற்று குமரி மாவட்ட அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு கோப்பையை வருமானவரித்துறை அதிகாரி ஸ்டான்லி பீட்டர் வழங்கினார்.

அனைத்து போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் ஜனவரி மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Next Story