மாவட்ட செய்திகள்

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயணிகள் வலியுறுத்தல் + "||" + Attendance of commuters at Kumbakonam railway station

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயணிகள் வலியுறுத்தல்

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயணிகள் வலியுறுத்தல்
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் பயணிகள் வலியுறுத்தினர்.
கும்பகோணம்,

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் பயணிகள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு ரெயில்வே பயணிகள் சேவை குழு உறுப்பினர் சுந்தர் தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது பயணிகள் கூறிய தாவது:-


கும்பகோணம் ரெயில் நிலையத்தின் மேற்கூரை பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் மேற்கூரை வழியாக ஒழுகுவதால் சிரமம் ஏற்படுகிறது. எனவே மேற்கூரையை விரைந்து சீரமைக்க வேண்டும். வடிகால்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

நீட்டிக்க வேண்டும்

2-வது நடைமேடையின் நீளத்தை நீட்டிக்க செய்ய வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கும்பகோணத்தில் ‘கிராசிங்கிற்காக’ நீண்ட நேரம் நிற்கிறது. இதன் காரணமாக பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். பயணிகள் தங்கும் அறைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை தேவை. இவ்வாறு பயணிகள் கூறினர்.

பயணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என சேவை குழு உறுப்பினர் உறுதி அளித்தார்.

ஆய்வு

முகாமில் திருச்சி கோட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் கிரி, வக்கீல் ராஜேந்திரன், கும்பகோணம் அனைத்து வணிக சங்க கூட்டமைப்பு செயலாளர் மாணிக்கவாசகம், நிலைய மேலாளர் முருகானந்தம், வணிக ஆய்வாளர் தங்க மோகன், துணை நிலைய மேலாளர் தாயுமானவன், சுகாதார ஆய்வாளர் ரவிராகுல், உணவுத்துறை ஆய்வாளர் கிளாஸ்டின், மற்றும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர். முன்னதாக பயணிகள் சேவை குழு உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சாலைகளில் கூட்டமாக செல்ல கூடாது மோட்டார் வாகன ஆய்வாளர் பேச்சு
சாலைகளில் கூட்டமாக செல்ல கூடாது என்று மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
2. தொற்றுநோய் பரவுவதை தடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி நகராட்சி ஆணையர் தகவல்
தொற்றுநோய் பரவுவதை தடுக்க துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறினார்.
3. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.
4. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எதிரொலி மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாதியில் ரத்து
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால், மனு கொடுக்க வந்தவர்கள் பெட்டியில் போட்டு சென்றனர்.
5. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் ரத்து
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனு கொடுப்பதற்காக வந்த பொதுமக்கள் மனுக்களை அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.