மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி + "||" + Worker who gave up life after eating poison pill

கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி

கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று உயிரை விட்ட தொழிலாளி
ஆரல்வாய்மொழி அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கனகமூலம் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 40). இவருக்கு ஜானகி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நாகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.


செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல்சூளையில் நாகராஜன் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கள்ளக்காதல்

இந்த நிலையில் நாகராஜனுக்கும், செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் உள்ள தொடர்பை அறிந்த ஜானகி அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் கணவனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால், நாகராஜன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நாகராஜன் வீட்டில் இருந்த விஷ மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் விஷ மாத்திரையை தின்று தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. மதுவாங்க பணம் கேட்ட தகராறில் முதியவர் கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
மதுவாங்க பணம் கேட்ட தகராறில் முதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
2. பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3. மனைவி- மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை
மனைவி-மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
4. சிவகிரியில் தந்தை-மகளுக்கு கத்திக்குத்து; தொழிலாளிக்கு வலைவீச்சு
சிவகிரியில் தந்தை-மகளை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசாா் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி
ஊத்துக்குளியில் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-