மாவட்ட செய்திகள்

குலசேகரம் அருகே சிறுமியை கடத்திய வேன் டிரைவருக்கு வலைவீச்சு + "||" + A van driver abducts girl near Kulasekaram

குலசேகரம் அருகே சிறுமியை கடத்திய வேன் டிரைவருக்கு வலைவீச்சு

குலசேகரம் அருகே சிறுமியை கடத்திய வேன் டிரைவருக்கு வலைவீச்சு
குலசேகரம் அருகே தையல் பயிற்சிக்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்ற வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குழித்துறை,

குலசேகரம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமி தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். அவ்வாறு தையல் பயிற்சிக்கு சென்றபோது சிறுமிக்கும், குலசேகரம் கான்வெண்ட் சந்திப்பு சுண்ணாம்பு விளையை சேர்ந்த வேன் டிரைவர் எட்வின் (வயது 23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.


இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி தையல் பயிற்சிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்களுடைய மகளை பல இடங்களில் தேடினர். எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர், இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, சிறுமியை எட்வின் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

டிரைவருக்கு வலைவீச்சு

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்ற வேன் டிரைவர் எட்வினை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழில் போட்டி காரணமாக லாரி உரிமையாளர் கடத்தல் - 4 பேர் கைது
தொழில் போட்டி காரணமாக லாரி உரிமையாளரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்களில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல் 9 பேர் கைது
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 493 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4. தஞ்சையில் 880 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
தஞ்சையில் 880 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதாக நகராட்சி முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள், வேனுடன் பறிமுதல்: 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது