மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு + "||" + Woman slipped from the floor and died

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
பாவூர்சத்திரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாவூர்சத்திரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமால் மனைவி சரோஜா (வயது 67). இவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மாலை சரோஜா வீட்டு மாடியில் ஏறி அருகே உள்ள முருங்கை மரத்தில் இலை பறித்துள்ளார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.