மாவட்ட செய்திகள்

கச்சிராயப்பாளையத்தில், சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு + "||" + In kaccirayappalaiyat, Sub-Inspector's Motorcycle Theft

கச்சிராயப்பாளையத்தில், சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

கச்சிராயப்பாளையத்தில், சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
கச்சிராயப்பாளையத்தில், சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். 

பின்னர் மோட்டார் சைக்கிளை வீட்டுமுன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கினார். இந்த நிலையில் நேற்று காலை தூங்கி எழுந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள முகே‌‌ஷ் என்பவரின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர். 

அப்போது முகே‌‌ஷ் தனது வீட்டின் முன்பு நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்து திருட முயன்றது தெரிந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனின் மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.