மாவட்ட செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு பகுதியில், கரும்பில் வெட்டுப்புழு தாக்குதல் - வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு + "||" + Munkilturaippattu area, Blackboard attack on cane - Agricultural scientists study

மூங்கில்துறைப்பட்டு பகுதியில், கரும்பில் வெட்டுப்புழு தாக்குதல் - வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

மூங்கில்துறைப்பட்டு பகுதியில், கரும்பில் வெட்டுப்புழு தாக்குதல் - வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
மூங்கில்துறைப்பட்டு பகுதியில், கரும்பு பயிரில் அதிகளவில் வெட்டுப்புழு தாக்குதல் காணப்படுவதால் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கடுவனூர், கானாங்காடு, புதூர், பாக்கம், சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், ஈருடையாம்பட்டு, சுத்தமலை, அரும்பராம்பட்டு, புதுப்பட்டு, மூலக்காடு உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரும்பு பயிரில் அதிகளவில் வெட்டுப்புழு தாக்குதல் காணப்படுவதால் கரும்பின் வளர்ச்சி குறைவாகவும் மேற்பகுதி தோகைகள் அதிகளவில் காய்ந்தும் காணப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் புகார் தெரிவித்திருந்தனர்.

அதன்பேரில் வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி முதல்வரும் விஞ்ஞானியுமான பாண்டியன் மற்றும் பூச்சியியல் துறை விஞ்ஞானிகளான ஜான்சன், தங்கராஜ்,எட்வர்ட் மற்றும் ராதாகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் கடுவனூர் பகுதியில் கரும்பு பயிரை ஆய்வு மேற்கொண்டு அதில் தாக்கியுள்ள வெட்டுப்புழு தன்மை குறித்தும், அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.