மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுன் தங்க காசு மாலை திருவிதாங்கூர் ராணி வழங்கினார் + "||" + The Queen of Travancore presented the 8-pound gold coin to Kanyakumari Bhagwati Amman

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுன் தங்க காசு மாலை திருவிதாங்கூர் ராணி வழங்கினார்

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுன் தங்க காசு மாலை திருவிதாங்கூர் ராணி வழங்கினார்
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8 பவுனில் தங்க காசு மாலையை திருவிதாங்கூர் ராணி வழங்கினார்.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், பகவதி அம்மனுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். மேலும், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் போன்றவையும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படுகின்றது.


முக்கிய பிரமுகர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் தங்க நகைகளை பகவதி அம்மனுக்கு வழங்கி வருகிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 22 பவுனில் தங்க கனக மணிமாலையை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார்.

தங்க காசு மாலை

கேரள மாநிலம் திருவனத்தபுரத்தில் உள்ள கவுடியார் அரண்மனையில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். திருவிதாங்கூர் சமஸ்தான ராணி லெட்சுமிபாய் கன்னியாகுமரி பகவதி அம்மனின் தீவிர பக்தர் ஆவார். அவர் அடிக்கடி இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

இந்தநிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு 8¼ பவுன் தங்க காசுமாலையை ராணி லெட்சுமிபாய் நேரில் வந்து வழங்கினார். கோவில் மேலாளர் ஆறுமுகநயினாரிடம் இந்த தங்க காசுமாலை வழங்கப்பட்டது. தினமும் காலை 11 மணிக்கு நடைபெறும் சந்தனகாப்பு அலங்காரத்தின்போது இந்த காசுமாலையை அம்மனுக்கு அணிவித்து பூஜைகள் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தலைஞாயிறு பேரூராட்சியில் ரூ.28 லட்சத்தில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு அமைச்சர் வழங்கினார்
தலைஞாயிறு பேரூராட்சியில் ரூ.28 லட்சத்தில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பினை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
2. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26 கோடி கடன் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.26 கோடி கடன் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
3. சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.75 லட்சம் கடன் உதவி அமைச்சர் கந்தசாமி வழங்கினார்
சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.75 லட்சம் கடன் உதவி அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.
4. கூடலூர் அருகே 125 கிலோ தங்கத்தூள் கலந்த மண் பறிமுதல் மில்லுக்கு ‘சீல்’; பெண் உள்பட 2 பேர் கைது
கூடலூர் அருகே 125 கிலோ தங்கத்தூள் கலந்த மண் பறிமுதல் செய்யப் பட்டு, சம்பந்தப்பட்ட மில்லுக்கு ‘சீல்’ வைக்கப் பட்டது. மேலும் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. மருத்துவத்துறை அலுவலர்களுக்கு ‘கபசுர’ குடிநீர் கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்
மருத்துவத்துறை அலுவலர்களுக்கு ‘கபசுர’ குடிநீர் கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார்.