காங்கேயம் அருகே, சிறுமியை கடத்தியதாக வடமாநில வாலிபர் மீது புகார்


காங்கேயம் அருகே, சிறுமியை கடத்தியதாக வடமாநில வாலிபர் மீது புகார்
x
தினத்தந்தி 3 Dec 2019 3:45 AM IST (Updated: 3 Dec 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே சிறுமியை வடமாநில வாலிபர் கடத்தியதாக சிறுமியின் தந்தை காங்கேயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

காங்கேயம்,

காங்கேயம் அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு உடன் வேலை பார்த்த வடமாநில வாலிபர் ஒருவருடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார்.இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி அந்த சிறுமியின் தாயார் ஊரிலிருந்து நூற்பாலைக்கு வந்தார். பின்னர் சிறுமியை அழைத்து கொண்டு ஊருக்கு போனார்.

போகும் வழியில் வெள்ளகோவில் பஸ்நிலையத்தில் சிறுமியின் தாயார் கழிவறைக்கு சென்றுள்ளார்.பின்னர் வந்து பார்த்த போது வெளியில் நின்று கொண்டிருந்த மகளை காணவில்லை.

இதுபற்றி அந்த சிறுமியின் தந்தை காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதில் தன்னுடைய மகளை வட மாநில வாலிபர் ஒருவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story