மாவட்ட செய்திகள்

கொரடாச்சேரி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு + "||" + Near Koradacherry, worth Rs 1 crore Idol Amman statue theft

கொரடாச்சேரி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு

கொரடாச்சேரி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு
கொரடாச்சேரி அருகே ரூ 1 கோடி மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலையை யாரோ மர்ம மனிதர்கள் திருடிச்சென்று விட்டனர்.
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள தாழைக்குடி ஊராட்சி கீரன்கோட்டகம் என்ற இடத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம மக்களின் நிர்வாகத்தில் உள்ள இந்த கோவில் பழுதடைந்ததால் கோவிலை புனரமைக்கும் பணியில் அந்த கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் கோவிலில் இருந்த அம்மன் சிலையை எடுத்து அருகில் உள்ள சிந்தாமணி விநாயகர் கோவில் கருவறையில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர்.

இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அம்மன் கோவில் கட்டுமான பணிகளுக்காக சிமெண்ட் மூட்டைகள் வந்துள்ளது. அதனை சிந்தாமணி விநாயகர் கோவில் உள்புறம் வைப்பதற்காக கோவிலை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது கோவிலின் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த அம்மன் சிலை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராம மக்கள் இதுகுறித்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

காணாமல்போன அம்மன் சிலை 1½ அடி உயரம் இருக்கும் என்றும், அந்த சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்றும், சிலையின் மதிப்பு ரூ.1 கோடி என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அம்மன் சிலை, விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டிருப்பதை தெரிந்த நபர்கள் யாரோ அதை திருடி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புனரமைப்பு பணிகளுக்காக வேறு இடத்தில் வைக்கப்பட்டு இருந்த ஐம்பொன் அம்மன் சிலை காணாமல் போயிருப்பது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
தலைவாசல் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து, 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
உளுந்தூர்பேட்டை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர்.
3. மளிகை கடையில் நூதன முறையில் திருடிய கும்பல் - போலீசார் வலைவீச்சு
மளிகை கடையில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடிய வெள்ளை சட்டை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
4. உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகள் திருட்டு
திருச்சி உறையூரில் வீட்டின் கதவை உடைத்து 10¼ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் : தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது
பெங்களூருவில், திருட்டு, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1.48 கோடி நகை-பணம் உள்பட ஏராளமான பொருட்கள் மீட்கப்பட்டன. பெங்களூருவில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை தென்கிழக்கு மண்டல போலீசார் கைது செய்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-