முத்துப்பேட்டையில் தொடர் மழைக்கு 5 வீடுகளின் சுவர் இடிந்தன


முத்துப்பேட்டையில் தொடர் மழைக்கு 5 வீடுகளின் சுவர் இடிந்தன
x
தினத்தந்தி 3 Dec 2019 4:15 AM IST (Updated: 3 Dec 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் தொடர் மழைக்கு 5 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வாக உள்ள இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முத்துப்பேட்டை தெற்குக்காடுவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது45), பாண்டியன் (50), செம்படவன்காடுவை சேர்ந்த தேவி(40), முத்துப்பேட்டை மருதங்காவெளியை சேர்ந்த பழனிவேல் (55), முத்துப் பேட்டையை சேர்ந்த சரிபு சேக் அப்துல் காதர் ஆகிய 5 பேரின் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நன்னிலம்

இதேபோல் நன்னிலத்தில் பெய்து வரும் கனமழையால் பனங்குடி வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ்(65) என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தங்கராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயமடைந்த அவரை உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வீட்டின் சுவரில் சிக்கி ஆடு ஒன்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து நன்னிலம் தாசில்தார் திருமால் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story