மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 4 பேர் கைது + "||" + Four arrested for plotting to raid Mayiladuthurai

மயிலாடுதுறையில் வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 4 பேர் கைது

மயிலாடுதுறையில் வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 4 பேர் கைது
மயிலாடுதுறையில் வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் மெயின்ரோடு தேவசேனா நகர் பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 பேர் பேசி கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே போலீசார், தப்பி ஓட முயற்சித்தவர்களில் 4 பேரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை ரஸ்தா மணவெளித்தெருவை சேர்ந்த வாசுதேவன் மகன் வெங்கடேசன் (வயது 34), கூறைநாடு காக்கும் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த தங்கம் மகன் சக்திவேல் (31), சேமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஸ்டாலின் (28), திருமஞ்சன வீதி காவிரிக்கரை தெருவை சேர்ந்த மைதீன் மகன் முகமதுநசீர் (34) ஆகியோர் என்பதும், அவர்கள் வழிப்பறி செய்ய சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், சக்திவேல், ஸ்டாலின், முகமதுநசீர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி, அரிவாள், மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய சீர்காழி அருகே தொடுவாய் பகுதியை சேர்ந்த பாபு மகன் நாகராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது
மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. என்.எல்.சி. தொழிலாளியிடம் வழிப்பறி: குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது
நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
3. வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
4. பனப்பாக்கத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி - மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு
பனப்பாக்கத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
5. மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 4 பேர் கைது
மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.